அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சான்றிதழ் வழங்குதல்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சான்றிதழ் வழங்குதல்

அலைடு ஹெல்த் சார்பில் சான்றிதழ் வழங்குதல் 

சேலம் விநாயகா மிஷன்ஸ் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டப்படிப்புகளுடன் கூடுதல் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் விநாயகா மிஷன்ஸ் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை பிரகாசமாக்கும் பட்டப்படிப்புகளுடன் கூடிய கூடுதல் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது, சமீபத்திய மற்றும் வருங்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கூடுதல் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பாக தொழிற்துறை சார்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய சீமன்ஸ் சுகாதார நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மூலம் கதிரியக்கவியல், இதய சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வக பிரிவு ஆகியவற்றுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கி கூடுதல் சான்றிதழினை தொழிற்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரித்து வருகிறோம்.

மேலும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியாவின் கீழ் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ஸ்வையம் மூலம் மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுத்து பேராசிரியர்களின் உதவியுடன் முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். தொடர்ந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பாடநெறிகளையும் மாணவர்களுக்கு வழங்கி பல்கலைக்கழகத்தின் மூலம் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளோம்.

சுமார் 700 மாணவர்கள் சமீபத்தில் இவ்வாறான கூடுதல் சான்றிதழினை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story