வாலாஜாபாத் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள்
பட்டு மாலை, தூய்மை பணியாளர் விருது, அறுசுவை விருந்து என தூய்மை பணியாளர் தினத்தில் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நெகிழ வைத்த நிகழ்வு பெரிதும் வரவேற்பு பெற்றது. நோய் நாடி நோய்முதல் நாடி என திருக்குறளுக்கு ஏற்ப தூய்மை பணியாளர்கள் பணிகளை முழுமையாக செய்யும் நிலையில் தூய்மை நிலவும் நிலையில் சுகாதாரமும் மிகவும் பேணி பாதுகாக்கப்படும். இதற்காக நாள் முழுவதும் தூய்மை காக்கும் பணியாளர்களை போற்றும் வகையில், ஆண்டு தோறும் தூய்மை பணியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் தற்போது அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த தனியார் ஒப்பந்ததாரர்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒப்பந்ததாரர் லயன் வெங்கடேசன் திருமணநாளை ஓட்டி அவரது சார்பில் வாலாஜாபாத் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு செய்ய திட்டமிட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. அவ்வகையில் வாலாஜாபாத் பேரூராட்சி பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கும் வண்ணம் வாலாஜாபாத் பல்லவன் அரிமா சங்கம் , பாலாறு அரிமா சங்கம், ஓரகடம் தொழில் நகர அரிமா சங்கம் என பலர் இணைந்து தூய்மை பணியாளர்களை கௌரவித்தல் மற்றும் சிறந்த தூய்மை பணியாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு, கடந்த 2016 முதல் வாலாஜாபாத் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் சுமார் 75 பணியாளர்கள் மூலம் நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களின் பணிகள் சிறந்து விளங்கியதாகவும், இதனால் விரைவில் தமிழகத்தில் பாதிப்புகள் குறைந்து இருந்ததாகவும் தெரிவித்தார். வரும் காலங்களில் சிறந்த பேரூராட்சி ஆக தமிழக அரசால் தேர்வு செய்யப்படும் வகையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து நல் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தூய்மை பணியாளருக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், சிறந்த தூய்மை பணியாளர் விருது வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு சைவ அறுசுவை உணவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தூய்மை பணியாளர் தினத்தில் தங்களை கௌரவித்த நிர்வாகத்திற்கும் பெரும் நன்றி தெரிவித்ததாக தூய்மை பணியாளர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சேகர் , பேரூராட்சி செயலாளர் பாண்டியன் , லயன் வெங்கடேசன் , பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன்,திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட ர்கள் என பலர் கலந்து கொண்டனர்.