வடலூரில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் TPS அறிவுறுத்தலின்படியும், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தீபா மற்றும் வர்த்தக சங்க தலைவர் இரா.ஞானசேகரன் தலைமையில்,
சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு வடலூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு பொது மக்களுக்கு அளிக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு இணைய வழி குற்றம் பற்றி விளக்கப்பட்டது.
OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான App களில் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.