திருவாரூர்: சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
விழிப்புணர்வு
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாளவாய்க்கால் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் இருந்த பொது மக்களிடம் பெருகிவரும் சைபர் கிரைம் சம்பந்தமான இணைய வழி குற்றங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் காவல்துறையினர் விழிப்புணர்வு நடத்தினர்.
மேலும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டின் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள் போலியான ஆப்களில் குறைந்த வட்டியில் உடனடி கடன்கள் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story