சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
விழிப்புணர்வு
எண்கண் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் எண் கண் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இணையவழி குற்றங்கள் குறித்தும் ,அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story