திராவிட மாடல் ஆட்சி நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

திராவிட மாடல் ஆட்சி நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

விண்ணப்ப படிவம் வழங்கல்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்கள் உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ வழங்கினார்.

. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நேற்று திராவிட மாடல் ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்கள் உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை சட்ட மன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன் (எ) சீனு, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ திராவிட மாடல் ஆட்சியில் வழங்கிய நலத்திட்டங்கள் உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை வழங்கி பேசியதாவது. திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும், தமிழக அரசின் முலம் பொது மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பது குறித்து கணக்கு எடுப்பதற்காகவும் ,மேலும் பொது மக்களுக்கு தேவைகளை நாம் அறிந்து கொள்வதற்கு இந்த படிவங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார் அதேபோல் தேர்தல் பணிக்குழ உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று இந்த படிவத்தை வழங்கி பொது மக்கள் தமிழக அரசில் எந்தெந்த நலத்திட்ட உதவிகள் பெற்றுள்ளார்கள் என படிவத்தினை பூர்த்தி செய்து பெற வேண்டும்.

குறிப்பாக இலவச பேருந்து பயணம், பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ 1000, கலைஞரின் மகளிர் உரிமை தொகை, விவசாயகடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது என தெரிவித்தார். இதேபோல் புதுப்பாளையம் பேரூராட்சியிலும் உள்ள 12 வார்டுகளிலும் நலத்திட்டங்கள் உதவிகள் கணக்கெடுக்கும் படிவத்தை படிவங்களை எம்எல்ஏ வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அன்புச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரஞ்சித்குமார், பானுப்பிரியா, மாவட்ட பிரதிநிதிகள் சுதாகர், ஜெயபிரகாஷ், ரஞ்சித், கிளைச் செயலாளர்கள் பழனி, ரமேஷ், சேட்டு, குமார், ஜெயராஜ், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story