மின்னணு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 18 ம் தேதி முதல் விழிப்புணர்வு மையம் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவித்தது இருந்தது . அதன் பேரில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பணிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபிசெட்டிபளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் 115 இயந்திரங்களும்,ஈரோடு வருவாய் கோட்டாட்சியரிடம் 108 இயந்திரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , ஈரோடு , மொடக்குறிச்சி , பெருந்துறை , பவானி, அந்தியூர் , சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 9 இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு மையம் அமைக்கப்படவுள்ளது. மேற்கண்ட விழிப்புணர்வு மையத்தில் அலுவலக நேரங்களில் பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்தும், அதிலுள்ள சந்தேககங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.