வனத்துறை சார்பில் காட்டு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
தமிழ்நாடு வனத்துறை, நெல்லை வனஉயிரின சரணாலயம், சிவகிரி வனச்சரகம் சார்பாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனஉயிரினக்காப்பாளர் டாக்டர். முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன்,சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன் மற்றும் தலைமை ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளையினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி, சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் விஸ்வநாதப்பேரி கிராமம் ஆகிய இடங்களில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த கலை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.