போலியோ சொட்டு மருந்து குறித்து விழிப்புணர்வு
போலியோ சொட்டு மருந்து குறித்து விழிப்புணர்வு
கடலூர் பகுதியில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் போலியோ சொட்டு மருந்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் நாளை (03. 03. 2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் நிகழ்வுகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை போன்று நடத்தப்படவுள்ளது. போலியோ என்ற இளம்பிள்ளை வாத நோய்க்கு உலகம் தோறும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை போன்று தமிழ்நாட்டில் போலியோ நோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளை UNICEF நிறுவனம், பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து போலியோ சொட்டு மருந்து தரும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதியில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் போலியோ சொட்டு மருந்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story