கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம் கிராம காவலர்கள் பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் கிராம காவல் திட்டத்தின் மூலம் கிராம காவலர்கள் அனைவரும் தங்களது கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தங்களது கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமங்களிலோ கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story