விழு‌ப்புர‌த்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழு‌ப்புர‌த்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழு‌ப்புர‌ம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


விழு‌ப்புர‌ம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் காஞ்சனா, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பார்கவி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகரன், சிறப்பு வட்டாட்சியர் தேர்தல் ஜெயலட்சுமி, உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் அருண்குமார். ஜெயகணேஷ், ஸ்ரீலதா, கலாவல்லி உட்பட துறை துறை சார்ந்த அலுவலர் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story