கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

உழவர் சந்தையில் விழிப்புணர்வு

தர்மபுரி உழவர் சந்தையில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமிய கலை குழுவினருடைய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி உழவர் சந்தையில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்ல வருகின்றனர் இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் முன்னிட்டு பொதுமக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து கிராம கலை குழு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எனது வாக்கு விற்பனைக்கு இல்லை .18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸிலி ராஜ்குமார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர்,

கையேடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் வருவாய் ஆய்வாளர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story