பாலக்கோடு பகுதிகளில் தேர்தல் பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மற்றும் அதன் செயல்பாடுகள் கண்காணிப்பு படையினர் ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை மற்றும் அதன் செயல்பாடுகள் கண்காணிப்பு படையினர் ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 2024 ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சாந்தி அவர்கள் பல்வேறு விதமான தேர்தல் பணிகளை முன்னெடுத்து அது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார் எந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மையங்களில் 183 வாக்குச்சாவடி அடங்கியுள்ள 272 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம், 85 வயது கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏதுவாக 12-D படிவங்கள் வழங்கும் பணி போன்றவைகள் குறித்தும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார் அதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வெள்ளிசந்தை கூட்ரோட்டில் பறக்கும் படையினர் வாகனங்கள் சோதனை செய்து வரும் பணிகளையும், கரகதஅள்ளி கூட்ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு பணி மேற்கொண்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப, பார்வையிட்டார். இந்நிகழ்வுகளின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா, வாக்குப்பதிவு இயந்திரம் மின்னணு பொறுப்பு அலுவலர் தேன்மொழி, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story