வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு !

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு !

விழிப்புணர்வு

சிவகங்கையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய்கறிகளால் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு வடிவமைப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பார்வையிட்டு தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்திற்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல்–2024-ஐ ஒரே கட்டமாக தேர்தல் நடத்திடும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல்-19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக, காய்கறி வகைகளைக் கொண்டு சிறப்பான வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வருகின்ற பொதுமக்கள் இதனை எளிதில் பார்த்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, அறிந்து கொள்கின்ற வகையில், இவ்வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளம்‌ வாக்காளர்கள், தங்களது வாக்குரிமையை நிலைநாட்டுகின்ற வகையில், அனைவரும் வருகின்ற ஏப்ரல்-19ஆம் தேதியன்று தவறாமல் வாக்களித்திட வேண்டும் என பேசினார்

Tags

Read MoreRead Less
Next Story