சிலம்பாட்டம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்த மாணவர்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட சிலம்பாட்ட மாணவிகள்
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகில்இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் 100%வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி கல்லூரி விளையாட்டு துறை மாணவர்கள் சிலம்பாட்டம் மூலம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் தொடக்கி வைத்தார் இந்தப் பேரணியில் சிலம்பப் பயிற்சியில் ஈடுபடும் பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து பேரணி தொடங்கி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்து அங்கு 100% வாக்களித்து குறித்து சிலம்பாட்டம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி செய்தி மக்கள் தொடர்பாளர் மோகன் சிலம்பாட்ட பயிற்சி ஆசிரியர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story