இராபி பருவ பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

இராபி பருவ பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

இராபி பருவ பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
இராபி பருவ பயிரினை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வேளாண்மை துறையின் சார்பில், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், இராபி பருவ பயிரிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமையில், வேளாண் அலுவலர் பிரபாவதி,வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி வேளாண் அலுவலர் தமிழரசன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் சரத்குமார் ஆகியோர், ஊத்தங்கரை வெள்ளி சந்தையில் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினர். ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிக்கு உட்பட்ட விவசாயிகள், இராபி பருவ நிலக்கடலை, நெல் ஆகியவற்றை பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெல் ஒரு ஏக்கருக்கு 550 ரூபாயும், நிலக்கடலை 311 ரூபாய் பயிர் காப்பீடு செய்வதன் மூலம், இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு 36,700 ரூபாயும், நிலக்கடலைக்கு 20,750 ரூபாய், இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story