கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உருவாக்கப்பட்ட சிறப்பான திட்டமான கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் வகையில்,

விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கிராம காவலர்கள் தங்களது தொடர் காவல் பணிகளுக்கு மத்தியிலும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதன்படி பொதுமக்களிடம் பேசிய கிராம காவலர்கள் சமீப காலமாக சில சமூக விரோதிகளால் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான வதந்தியை சில சமூக விரோதிகளால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதை காண முடிகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் *பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக எண்ணான 94981- 00690 என்ற எண்ணையோ அல்லது 100-க்கு தொடர்பு கொண்டோ கேட்கலாம்.

மேலும் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தையே முதலில் அணுக வேண்டும் என்றும் பொதுமக்கள் யாரும் தவறான செயலில் ஈடுபட வேண்டாம்,

என்றும் அவ்வாறு பொய்யான வதந்திகளை நம்பி தவறான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டுள்ளார் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story