கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு
விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய போது
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம காவலர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் திருட்டு மற்றும் செயின் பறிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதன்படி பொதுமக்களிடம் பேசிய கிராம காவலர்கள் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் உள்ள ஜன்னல், வீட்டின் மேற்கூரை, அலமாரி, பீரோ, போன்றவற்றின் மீது சாவியை வைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும், விடுமுறை காலம் வருகிறது என்பதால் நீண்ட நாள் பயணமாக வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது தங்களது கிராம காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,
பெண்கள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டு தனியாக செல்ல வேண்டாம், அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகிக்கப்படும் நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.