விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளி 

கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், விபத்தில்லா தீபாவளி குறித்து கெங்கவள்ளி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) செல்லபாண்டியன் மற்றும் வேலுமணி தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள், மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி மூலம் செயல் விளக்கம் செய்து காட்டினர். பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகை நாளில், பட்டாசு வெடிக்கும் போது, பாதுகாப்பாக வெடித்திட வேண்டும். மின்சாரம் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. விலங்குகள் துன்புறுத்தும் வகையில் பட்டாசு வெடிக்க கூடாது என மாணவர்களுக்கு விளக்கம் அளித்து, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமுவேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story