வீடு கட்டும் திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வு
விழிப்புணர்வு முகாம்
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் அங்கராயநல்லூரில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முகாமில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசின் வீடு கட்டும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் உடனடியாக விரைந்து பணி களை தொடங்கி வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். இதற்காக அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றார். இதில் சிங்கவரம், ஊரணிதாங்கல், ஜெயங்கொண் டான், ஜம்போதி, மேல் எடையாளம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் பிலால், ஒன்றிய பொறியாளர்கள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், பணி மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Next Story