கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு
ஒன்றிய அரசு ஹிட் & ரன் என்ற புதிய சட்டத்தை கடந்த மாதம் நடைமுறை படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில் கனரக வாகன ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் விபத்து நடந்த இடத்திலேயே இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் 10 ஆண்டுகள் தண்டனையும் 7 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த ஹிட் & ரன் சட்டத்தினால் கனரக வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் தேனி மாவட்டம் சார்பாக 500 க்கு மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சட்டத்தினால் அரசு மற்றும் தனியார் பேருந்து உட்பட அனைத்து கனரக வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை வழங்கினர்.
இதில் தேனி உப்பார்பட்டி விலக்கு பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை கடக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் பிரச்சூரங்களை தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 50 க்கு மேற்பட்டோர் பிரச்சூரங்களை வழங்கினர்.