காங்கேயம் இலங்கை அகதிகள் முகாமில் விழிப்புணர்வு முகாம்
காங்கேயம் இலங்கை அகதிகள் முகாமில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கரூர் சாலையில் இயங்கி வரும் இலங்கை அகதிகள் முகாமில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் அகதிகளில் மற்றும் போலிசாருக்கும் இடையை கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் காங்கேயம் முகாமில் வாழ்ந்து வரும் உங்களின் அனைவரது தேவைகளையும், அடிப்படை வசதிகள், குறைகள், உங்களுக்கு ஏற்படும் அநீதிகள், குற்றங்கள் போன்ற அனைத்து விதமான கோரிக்கைகளையும் காங்கேயம் காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் எனவும், இக்கூட்டம் போலிசாருக்கும் அகதிகளாக வாழ்ந்து வரும் உங்களுக்கும் இடையே நட்புறவை மேம்படுத்தும் விதமாக நடத்தப்படுகிறது எனவும் காங்கயம் உதவி ஆய்வாளர் கார்த்திக்குமார் இக்கூட்டத்தில் தலைமை தாங்கி மக்களுக்கு தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், முகாமின் தலைவர் நந்தினி, பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story