பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறையினரால் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது . பள்ளி வாகனத்தில் பள்ளி சிறுவர் சிறுமிகளை ஏற்றி செல்கின்றோம் என்ற நினைவுடன் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது பள்ளி சிறுவர் சிறுமிகளை இறக்கும்போதும் ஏற்றும் போதும் அவர்கள் இறங்கி சாலையை கடந்து சென்றுவிட்டனர் எனவும் பேருந்தில் ஏற்றிய பின் கதவை மூடிய பின் பேருந்து இயக்க வேண்டும்.
சிறுவர் சிறுமிகளை ஏற்றிச் செல்லும் போது வாகனத்திற்குள் சிறுவர் சிறுமிகள் கீழே விழுந்து வண்ணம் திடீரென பேருந்தை பிரேக் அடிக்க கூடாது. பள்ளி சிறுவர்களை பேருந்தில் ஏற்றி விடுவதற்கும் இறக்கி விடுவதற்கும் ஒருவர் இருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக முதலுதவி பெட்டிகள் அதில் உள்ள பொருட்களுடன் இருக்க வேண்டும். பேருந்தில் பிளாட்பார்ம் சரியான தரத்தில் இருக்க வேண்டும். ஆகிய தகவல்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகன ஓட்டுனர்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூறினார்.