நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம்

கலெக்டர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு குறித்த விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு
வருகிற 2024-நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்தல் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது:- வருகிற 2024- நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம் அமைக்கப்பட்டு வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும், அதற்கான வசதிகளை எற்படுத்தவும் இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்விளக்க வாகனம் மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story