வயிற்றுப்போக்கை தடுக்க விழிப்புணர்வு முகாம்

வயிற்றுப்போக்கை தடுக்க விழிப்புணர்வு முகாம்

ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வயிற்றுப்போக்கை தடுக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் வயிற்று போக்கினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பை தடுக்க, வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளிலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வயது 5க்கு உட்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும். மேலும் தாய்ப்பாலின் மேன்மை, ஓ.ஆர்.எஸ் கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரை வழங்கும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்குவர். இம்முகாம் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 600 குழந்தைகளுக்கு முன் எச்சரிக்கையாக 2 ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்கள், 14 துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை குழந்தைகளின் பெற்றோர் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story