மது, கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைசார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. கலால் உதவி ஆணையர் பொருப்பில் சரவணன், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓசை இசை கலைஞர்கள் குழுவின் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்,

இதில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளான, தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய், உயர் ரத்த அழுத்தம். இருதய வீக்கம், ஏற்படுகிறது, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது, கண்பார்வை மங்குதல், கை, கால் வலிப்பு ஏற்படுகிறது, மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கி சோர்வடைய செய்கிறது, கல்லீரல் பாதிக்கப்படுகிறது, மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படுகிறது, என்பதனை இசை மற்றும் பாடல் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியின் போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மேற்பார்வை அலுவலர் துரைராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் வனிதா, இளநிலை வருவாய் ஆய்வாளர். செல்வம், மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story