பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர் பிரசாரம்

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர் பிரசாரம்

திருப்பத்தூரில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

திருப்பத்தூரில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில்,பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சர்வ தேச பாலின தினம் நவம்பர் 25 ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 22 வரை நடைபெற்று வருகிறது. இப்பிரச்சாரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை எந்த வடிவில் இருந்தாலும், உரக்க சொல்" பொறுக்க மாட்டோம். குரல் எழுப்புவோம் என்ற முழக்கத்துடன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் பாகுபாடியின்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை ஆண், பெண் இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வோம். பெண்கள் விருப்பப்பட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம். அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம். பெண் பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்வதை ஊக்குவிப்போம்.

அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை தடுப்போம் உள்ளிட்ட பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் கு. செல்வராசு, மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம்உதவி ஊராட்சி இயக்குனர் எஸ்.விஜயகுமாரி, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story