கொடுவாயில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை

கொடுவாயில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை

விழிப்புணர்வு ஏற்படுத்திய போது

காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுவாயில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தாசில்தார் மயில்சாமி தலைமையில் நடைபெற்றது.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கேயம் பகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் 100 சதவிகித வாக்குபதிவை வழியுறுத்தி நேற்று‌ முன்தினம் காங்கேயத்தில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நேற்று மாலை காங்கேயம் அடுத்த நிழலி கிராமம் கொடுவாயில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருத்து நிலையம், சந்தை, குடியிருப்பு வீதிகள் போன்ற முக்கிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கைப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.‌ இந்நிகழ்விற்கு காங்கயம் வட்டாச்சியர் மயில்சாமி தலைமை தாங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வட்ட வழங்க அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, நில வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரூத் பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story