பேராவூரணியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி
பேராவூரணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சி, உடல்நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், "ழ" சைக்கிள் கிளப் சார்பில் வாரத்தில் இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு அதிகாலை நடைபெறவுள்ள விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகே தொடங்கிய பேரணி, சேதுசாலை வழியாக குருவிக்கரம்பை கைகாட்டி வரை சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியை பேரூராட்சி தலைவர் சாந்திசேகர் தொடங்கி வைத்தார். அரசு கலைக்கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். சைக்கிள் கிளப் இணைச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அருண், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், செயலாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் பேரணியில் சென்றனர். பேரணிக்கான ஏற்பாடுகளை "ழ" பவுண்டேஷன் தலைவர் டாக்டர் நீலகண்டன், நிறுவனர் கார்க்கி அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.