சிவகாசியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன்,இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி,மணிக்கட்டி ஊரணியில் மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு,வாக்காளர் அனைவரும்100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் முறை,இளம் தலைமுறை வாக்காளர்கள்,பொதுமக்கள், தன்னார்வலர்கள்,அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட வாக்காளர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்களவைத் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாட்டினுடைய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்; பலர் கலந்து கொண்டு சுமார் 8 கி.மீ நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story