புத்தகத் திருவிழாவில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

புத்தகத் திருவிழாவில்  மாணவிகளுக்கு விழிப்புணர்வு

விழுப்புரம் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சி திடலில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த புத்தக திருவிழாவானது வருகிற 11-ந் தேதி நிறைவடைகிறது. இப்புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் புத்தக திருவிழாவில் 2 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பள்ளி- கல்லூரி மாணவிகளிடம், பாலியல் குற்றங்கள் தடுப்பு சம்பந்தமாகவும், குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதேபோல் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கான உதவி மையத்தை 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்கான உதவி மையத்தை 181 என்ற எண்ணிலும் , மாணவர்களுக்கான உதவி மையத்தை 14417 என்ற எண்ணிலும், சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற எண்ணையும் அணுகி உதவி பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story