இருளர் இன மக்களுக்கு விழிப்புணர்வு!
விழிப்புணர்வு
இருளர் இன மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து இருளர் இன மக்களுக்கு சீர்வரிசை அழைப்புகளுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதன் முறை குறித்து செயல்முறை அளித்தார்.
Next Story