100% வாக்களிப்போம் என்ற வடிவத்தில் நின்று நடத்திய விழிப்புணர்வு !

100% வாக்களிப்போம் என்ற வடிவத்தில் நின்று  நடத்திய விழிப்புணர்வு !

தேர்தல் விழிப்புணர்வு 

பெரம்பலூர் மாவட்டம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வடிவத்தில் நின்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வடிவத்தில் நின்று நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கோகுல் கலந்து கொண்டார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரிகளின் 1,500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பாலக்கரை அருகில் உள்ள மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வடிவத்தில் நின்று நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கோகுல் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பல்வேறு தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலும் 1,500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு "100 % வாக்களிப்போம்" என்ற வடிவத்தில் நின்று பிரம்மாண்டமான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

இந்நிகழ்வில் சார் ஆட்சியர் தெரிவித்ததாவது: நம் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும்.

இளம் வாக்காளர்களாகிய நீங்கள் வாக்களிப்பதோடு அல்லாமல், உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர்களையும் 18 பூர்த்தியடைந்துள்ள உங்கள் நண்பர்களையும் தவறாது ஜனநாயக கடமை ஆற்ற வலியுறுத்த வேண்டும். 100 சதவீத வாக்குப்பதிவு நம் இலக்கு.

எனவே, அனைவரும் தவறாது விலைமதிப்பற்ற தங்கள் வாக்குரிமையை நேர்மையாக, மனசாட்சியுடனும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கோபால், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story