போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்வு

போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்வு

சந்திப்பு நிகழ்வு

விழுப்புரத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சந்திப்பு நிகழ்வு
விழுப்புரத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்வு சி.ஒய்.எஸ்., கம்யூனிட்டி கல்லுாரியில் நடந்தது.தமிழ்நாடு தன்னார் வலர் அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் சந்துருகுமார் வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமூகப்பணிகளை மேற்கொள்வது குறித்தும், தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கு ஏற்படும் இடையூறுகள், அரசுடன் இணைந்து பொது மக்களுக்கு சேவை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாடு தன்னார்வலர் கள் முன்னெடுக்கும், ஒகனேக்கல் முதல் பூம்புகார் வரை 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்வதில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பங்கு பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கண்ணன், அசோக், அருள்ராஜ் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பொருட்கள் நடமாட்டத்தினை 10581 என்ற எண் மூலம் பொதுமக்கள் போலீசுக்கு தகவல்களை தரலாம் என ஆலோசனை வழங்கினர்.ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Tags

Next Story