ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சார்பில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ‘ஊழலை மறுப்போம்: தேசத்தைக் காப்போம்” என்ற பொருண்மையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தது: நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்போது அதை வைத்து அளவான அழகான எளிமையான வாழ்க்கயினை மகிழ்வோடு வாழ முடியும். அதையும் தாண்டி நம் ஆடம்பர தேவைகளுக்காக பிறருக்கு நியாயமாக செய்ய வேண்டிய செயல்களுக்கு லஞ்சம் பெறுவது நாம் அவர்களிடம் பிச்சை பெறுவதற்குச் சமம்.

நாம் நமது கடமைகளில் இருந்து தவறாமல், நேர்மை பிறழாமல் வாழ முன்வர வேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை கட்டமைக்க மாணவர்களின் பங்கு இன்றியமையாதது என தெரிவித்தார். இந்நிகழ்வில் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமச்சந்திரா, கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story