உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சமையல் எண்ணெயை பயோடீசிலாக மாற்றுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில் பேக்கரி, ஓட்டல்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை பயோடீசலாக மாற்றும் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பேக்கரி ஓட்டல்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை பயோடீசலாக மாற்றும் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் அரசு மருத்துவமனை அருகில் ராமாபோடிங்யில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமை வகித்து பேசியதாவது,ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவ்வாறு பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசலாக மாற்ற உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் கடந்த 2018ம் ஆண்டு ரீபர்ப்பஸ் யூஸ்டு குக்கிங் ஆயில் எனும் திட்டத்தை தர்மபுரி உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது. பயோ டீசலாக மாற்ற வழங்கப்படும் எண்ணெய்க்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை வழங்கப்படுகிறது. எனவே அனைத்து ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி சமையல் எண்ணெய்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார். இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டத்தில் பயன்படுத்திய சமையல் எண்ணெயினை பயோ டீசலாக மாற்ற அதிகளவில் எண்ªணைய்களை வழங்கி சிறப்பாக செயல்பட்ட ஓட்டல்கள், பேக்கரி, சில்லி சிக்கன் கடை உரிமையாளர்களுக்கும், சமையல் எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் செறிவூட்டப்பட்ட பால், வெண்ணை, அரிசி, கோதுமை, உப்பு ஆகியவற்றின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், கந்தசாமி, சிவமணி, ஹோட்டல் அசோசியேசன் தலைவர் வேணுகோபால், ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story