போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
போக்சோ விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., 
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தொடக்கி வைத்து பேசியதாவது:- காவல்துறை பணி என்பது மற்ற துறைகளில் இருந்து மிகவும் வேறுபட்டது. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை கண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நம்மால் முடிந்த வகையில் இந்த பணிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

வாகன சோதனை ரோந்து பணிகளில் கவனமாக காவல்துறை இருக்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் அதி தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கும் ஒரு க்ரைம் நம்பராக பார்க்காமல், அந்த வழக்கின் பின்னால் உள்ள குடும்பத்தின் வலி, ஏக்கம் ஆகியவற்றை உணர்ந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் என்பது ஒரு குடும்ப சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு சமுதாய சம்பந்தப்பட்டதாகும். எனவே வழக்கு விசாரணையில் தீவிர காட்ட வேண்டும். என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி மதியழகன், ஏ எஸ் பி யாங்செங் டோமா பூட்டியா மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் சிறார் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான திரைப்பட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

Tags

Next Story