மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

கோப்பு படம் 

மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தங்களது சொத்து பிரச்சனைகளுக்கான தீர்வை சட்ட முறைப்படி அணுகுவது குறித்தும் பெற்றோர்களை பாதுகாத்து பராமரிக்காத பிள்ளைகளுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்த சொத்துக்களை ரத்து செய்ய உரிமை உண்டு என்பது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது மேலும் மூத்த குடிமக்களுக்கான சட்டங்கள் அவர்களுக்கான உரிமைகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூத்த வழக்கறிஞர் சிராசுதின் விளக்கி கூறினார்.

பின்னர் உடல் நலனை பேணிக்காப்பது சுகாதாரம் குறித்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மனநல மருத்துவர் அசோக் மூத்த குடிமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி எண் 14567 என்ற கட்டணம் உள்ள தொலைபேசி எண்ணை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, வருவாய் கோட்டாட்சியர்சத்தியபால கங்காதரன், துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story