விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

சேலத்தில் மகளிர் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.


சேலத்தில் மகளிர் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சேலத்தில் மகளிர் தின மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சேலத்தில் கூட்டு நடவடிக்கை குழு, மக்களின் சேவகன் சமூக நல அமைப்பு, தமிழ் மாநில மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் இணைந்து மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்ட விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டது.

அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் நடந்த ஊர்வலத்துக்கு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி தலைமை தாங்கினார். இதில், தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரின்ஸ், மக்களின் சேவகன் சமூக நல அமைப்பின் நிறுவனர் அழகாபுரம் ஜெ.மோகன் ஆகியோர் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலமானது, அஸ்தம்பட்டியில் தொடங்கி காந்தி ரோடு, வின்சென்ட், அம்பேத்கர் சிலை, திருவள்ளுவர் சிலை வழியாக கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மக்களின் சேவகன் சமூக நல அமைப்பு சட்ட ஆலோசகர் சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story