மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு

மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு

பெரம்பலூர் அருகேயுள்ள ரோவர் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் அருகேயுள்ள ரோவர் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் உள்ள ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெரம்பலூர் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பாளர் . வளவன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர் வை பிப்ரவரி - 29ம் தேதி ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் மாணவ மாணவியர்களிடத்தில் கல்வியின் முக்கியத்துவங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றியும் கட்டாயம் கல்வி கற்றால் தான் சிறந்த மனிதனாகவும் சிறப்பான ஆற்றல்மிக்கவராகவும், நல்லெண்ணம் நற்செயல் நற்பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு நபராக இருக்க முடியும் என்று கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டை குவளை முறை, மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளே இல்லாத மனிதாபிமானமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டு மெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதையும் மாணவிகளிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் மற்றும் பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டு மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடினார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர், புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story