ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு

ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு

பிரச்சார வாகனம் தொடங்கி வைப்பு


மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில் உலக ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழிப்புணர்வு ரதம் கொடியசைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் உலக ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழிப்புணர்வு ரதம் கொடியசைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இன்று (27.11.2023) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் குடும்ப நலத்திட்டம் 1956-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய் - சேய் நலத்தை மேம்படுத்துவதன் மூலம் பிறப்பு விகிதத்தை குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிகோளாகும். '

குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குடும்ப நலத்திட்டம் ஒரு மக்கள் திட்டமாக நிறைவேற்றுவதால் சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டமாக விளங்குகிறது. குடும்ப நலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கு சமுதாய ஒத்துழைப்பும், அரசியல் தலைவர்களின் ஈடுபாடும், சிறந்த நிர்வாக திறமையே காரணமாகும். வாழ்க்கைத் தரம் உயர்வடைய அடிக்கடி பிள்ளை பெறுவதிலிருந்து தாய்மார்களை விடுவிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகும்.

குடும்ப நலத்துறை இய்க்குநர். மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களின் முழு முயற்சியுடன் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்தி தகவல் கல்வி தொடர்பு பணிகளால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தழும்பில்லா ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை திட்டம் சீன தேசத்து முறை என்று அழைக்கப்படும் இத்திட்டம் நம் நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு நவீன ஆண் குடும்பநல கருத்தடை சிகிச்சை மையமாக செயல்படுகிறது. படிப்படியாக அறுவை அரங்கு உள்ள எல்லா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இச்சிகிச்சை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சைமுறை, ஒரு ஆண் ஏன் நவீன "வாசக்டமி" செய்ய வேண்டும். இதனால் உடல் பலமோ, ஆண்மையோ எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. விருப்பம் இல்லாமல் கருத்தரிக்கும் அபாயம் இல்லாததால் திருமண வாழ்க்கையை அதிக இன்பத்துடன் அனுபவிக்க முடியும். எளிய முறையிலான நிரந்தரமுறை முலம் வலி இல்லாத, சுலபமான கருத்தடை சிகிச்சை, மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. 100 சதவீதம் பயனளிக்கக்கூடியது. வேண்டாத கருத்தரிப்பு ஏற்படாமல் ஆயுள் முழுவதும் பாதுகாப்பு. தழும்பில்லா "வாசக்டமி" சிகிச்சை முறையின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.ஏ.அன்பரசி. மாவட்ட தகவல் கல்வி அலுவலர் சி.எஸி.ரமணன், மாவட்ட புள்ளியாளர் எம்.கிருஷ்ணராஜா, இளநிலை நிர்வாக அலுவலர் ரவி, அனைத்து வட்டார சுகாதார புள்ளியாளர் மற்றும் அரசு அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story