திண்டுக்கல்லில் சைபர் கிரைம் சார்பாக விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் சைபர் கிரைம் சார்பாக விழிப்புணர்வு

கோப்பு படம் 

திண்டுக்கல் சைபர் கிரைம் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஆய்வாளர் குணசுந்தரி மற்றும் காவலர்கள் அம்மையநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன்பட்டியில் இயங்கி வரும் PCK அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும்,

அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சோதனை சாவடியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story