சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

சைபர் கிரைம்  தடுப்பு குறித்த விழிப்புணர்வு
திண்டிவனத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டிவனத்தில் சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்தது. இதில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப் புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போது மான வழிமுறைகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள், சமூகவலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான ஆப்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.

மேலும் சைபர் கிரைம் குற்றங் களை தடுப்பது குறித்து நடமாடும் வாகனத்தில் பொருத்தப் பட்ட அகன்ற திரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவ ரியில் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story