இணையதளம் மூலமாக வரி செலுத்த விழிப்புணர்வு - ஆணையாளர் தகவல்

இணையதளம் மூலமாக வரி செலுத்த விழிப்புணர்வு - ஆணையாளர் தகவல்

வந்தவாசி நகராட்சியில் இணையதளம் மூலமாக வரி செலுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு - ஆணையாளர் தகவல்

வந்தவாசி நகராட்சியில் இணையதளம் மூலமாக வரி செலுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு - ஆணையாளர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை இணையதளம் மூலமாக செலுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள என்.மகேஸ்வரி தெரிவித்துள்ளார். வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த எம்.இராணி திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு நகராட்சி ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஊட்டி தேர்வுநிலை நகராட்சி உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த என்.மகேஸ்வரி வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளருக்கு நகராட்சி தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் க.சீனிவாசன், மேலாளர் ஜி.ரவி, பொறியாளர் பி.சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையாளர் தெரிவித்ததாவது, இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது போல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை முறைப்படி செலுத்த வேண்டும். இங்கு பெரும்பாலானவர்கள் நிலுவை வைத்துள்ளனர். அதிக அளவில் நிலுவை வைத்துள்ளவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களை நேரடியாக எனது தலைமையிலான குழுவினர் நேரில் சென்று வரிவசூல் ஈடுபட உள்ளோம். தவறும் பட்சத்தில் சொத்து ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் குறைவாக நிலுவைத் தொகை வைத்துள்ளவர்களை 4 வரி வசூலர்கள் தலைமையில் ஒவ்வொறுவருக்கும் 6 வார்டுகள் பிரித்து வரி வசூலை தீவிரப்படுத்த உள்ளோம். இதனை வருவாய் ஆய்வாளர் நகராட்சி மேலாளர்கண் காணித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளேன். நகராட்சிக்கு சொந்தமான கடை குத்தகைதாரர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி கடைக்கு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக செலுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் மக்கள் கூடும் கோவில், மசூதி, சர்ச் ஆகிய வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் அதேபோல் அங்கேயே பணம் செலுத்தி தங்களது வரி இனங்களில் கணக்கை நேர் செய்து கொள்ளலாம். செல்போன் மூலமாகவும் வரி இனங்களை செலுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். வரி இனங்களை செலுத்துவதால் நகராட்சியின் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏதுவாக இருக்கும். எனவே பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனஅவர் தெரிவித்தார்.

Tags

Next Story