கோகுலம் ஆஸ்பத்திரி சார்பில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
புகைப்பட கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள்
சேலம் கோகுலம் ஆஸ்பத்திரி சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சி சேலம் தெய்வீக மண்டபத்தில் தொடங்கியது. கோகுலம் ஆஸ்பத்திரி மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி வரவேற்றார்.
கண்காட்சியை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பஸ் உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரேசன், லாரி உரிமையாளர் சங்க தலைவர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்லம்மாள், தியாகராஜர் பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன், சிறு குறு நடுத்தர சங்க தலைவர் மாரியப்பன், வி.எஸ்.ஏ. கல்லூரி நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை 4 நாட்கள் நடக்கிறது என்றும், பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்றும் கோகுலம் ஆஸ்பத்திரி மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி கூறினார்.