அரசு பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பான் மசாலா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள், சாலை பாதுகாப்பு சைபர் குற்றங்கள் ,பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்கு அவசர உதவி எண்கள் பயன்படுத்த வேண்டும் .பெண்கள் கட்டாயம் மொபைல் போனில் காவல் உதவி ஆப்-ஐ பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என எஸ்பி ஜெயக்குமார் பள்ளி மாணவ மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story
