மாணவ-மாணவிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மாணவ-மாணவிகளுக்கு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தீயணைப்புத்துறை விழிப்புணர்வு

தீயணைப்பு துறை சார்பில் தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தீபாவளியன்று பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்றும், பெரிய வெடிகளை வெடிக்கும் போது சிறிது தள்ளி நின்று வெடிக்க வேண்டும். மெல்லிய ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிகள் வெடிக்கும் போது அருகில் வாளியில் எப்போதும் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கண்களுக்கு அருகில் வைத்து வெடிகளை வெடிக்க கூடாது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எவ்வாறு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story