ராமநாதபுரம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு 

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி தலைமையில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி பருத்தி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் . பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதில் மானாவாரி நிலங்களில் பருத்தியின் ரகங்களை தேர்ந்தெடுத்து அதை விதை நேர்த்தி செய்தும் பருத்தி விளை நிலங்களை பக்குவப்படுத்தி அதில் அதிக மகசூல் ஈட்டுவதற்கு தெளிவாக செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் பருத்தியை எவ்வாறு விற்பனை செய்து வருகின்றனர் என்பதையும் எவ்வாறு பருத்தி சாகுபடி செய்கின்றனர் என்பதையும் தெளிவாக விளக்க உரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கூடுதலாக ஈட்டப்படும் என்றும் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயம் செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர் இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story