சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நேற்றைய தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. போதை பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறையினர் தீவிரம் கட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக மாநகரின் பல்வேறு பள்ளிகளிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஓவியப் போட்டிகளை போலீசார் நடத்தி இருந்தனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக பேசிய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு , நமக்கு நன்றாக தெரியும் போதைப்பொருள் நல்லதல்ல என்பது. ஆனால் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகும் போது தனி நபர் மட்டுமல்லாது அவர்களின் குடும்பம் அவர் சார்ந்த சமூகம் ஆகியவை பாதிக்கப்படுகிறது.

மனதளவில் பாதிக்கப்படும்போது அவரது பொருளாதார நிலையும் பாதிப்புக்குள்ளாகிறது. பெண்களால் என்ன முடியும் என எண்ண வேண்டாம் , பெண்கள் தான் மிகப்பெரிய சக்தி இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி. உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது உங்கள் குடும்பத்தில் உள்ள ஆண் நபர்களை உங்களால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பள்ளியில் உங்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளோம். அதனை எங்களோடு சேர்ந்து நடைமுறைப்படுத்த எங்களோடு துணை நில்லுங்கள்.

உங்கள் குடும்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். என பேசினார். திருப்பூர் மாநகர காவல் துறையின் துணை கமிஷனர்கள் ராஜராஜன்,கிரீஸ் யாதவ் , உதவி கமிஷனர்கள் அணில் குமார், நந்தினி,நாகராஜ்,கண்ணையன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபா தேவி , பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் , காவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் திருப்பூர் கே எஸ் சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் தெற்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Tags

Next Story