காட்பாடியில் இ- கழிவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

காட்பாடியில் இ- கழிவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இ- கழிவு விழிப்புணர்வு 

காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் வில்லிஸ் என்டர்பிரைசஸ் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து எலக்ட்ரானிக் கழிவுகளை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் வில்லிஸ் என்டர்பிரைசஸ் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணைந்து நடத்திய இ கழிவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .கல்லூரி முதல்வர் முனைவர் ஜெய சாந்தி தலைமை வகித்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சௌந்தர்யா மற்றும் தாவரவியல் துறை முனைவர் இஸ்பில்லா ரோஸ்லின் ,முனைவர் அனிதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளிடம் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இ கழிவினால் ஏற்படும் தீமைகளைக் குறித்து விரிவான விளக்க உரைகளை அளித்தனர். இந்த நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள், வில்லிஸ் என்டர்பிரைசஸ் நிர்வாகிகள் எபினேசர் ஜோஸ்வா, சாது சுந்தர் சிங் , பிராங்கி பர்னபாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பான நடத்தினர். இதில் கல்லூரியில் பயின்று வரும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்க உரை அளிக்கப்பட்டது.

Tags

Next Story